மாகாணசபைத் தேர்தலில் தனியார் பஸ்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
சில சந்தர்ப்பங்களில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் தனியார் பஸ்கள் மீது போஸ்டர் ஒட்டி பாதைகைகளை தொங்கவிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்வதாக கெமுனு தெரிவித்துள்ளார்.
அதனை எதிர்க்கும் பட்சத்தில் பஸ் ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் பஸ்கள் பிடிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் இச்சந்திப்பில் உறுதி அளித்துள்ளார்.
சட்டவிரோத தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் பஸ்கள் பிடிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் இச்சந்திப்பில் உறுதி அளித்துள்ளார்.
0 comments :
Post a Comment