வட மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடத்தில் எழுந்த முரண்பாடுகள் காரணமாக அக் கட்சி மற்றுமொரு பிளவை எதிர்கொண்டுள்ளது.
வட மாகாண சபைத் தேர்தலில் மு.கா. தனித்துக் கேட்க வேண்டும் என ஒருசாராரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட வேண்டும் என மற்றொருசாராரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் வடக்கில் தனித்து நின்று மரச் சின்னத்திலேயே போட்டியிடுவது என கட்சியின் தலைமைத்துவமும் உயர்பீடமும் தீர்மானித்திருந்தது.
இத் தீர்மானத்தினால் அதிருப்தியுற்ற சிலர் தற்போது மு.கா.விலிருந்து வெளியேறி ஐ.ம.சு.சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டுள்ளதாகவும் நடைபெறவுள்ள தேர்தலில் ஐ.ம.சு.கூட்டமைப்பு பட்டியலில் போட்டியிடவுள்ளதாகவும் தெரியவருகிறது.
மு.கா. அரசுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என கட்சியின் தவிசாளரும் அமைச்சரமாக பஷீர் சேகுதாவூத் வலியுறுத்தி வந்தார். இருப்பினும் அவர் இறுதியாக இடம்பெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கவில்லை.
இதற்கிடையில் இறுதியாக நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொண்ட வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலர் அன்றைய தினம் கட்சித் தலைமையுடன் கடும்வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூட்டத்திலிருந்து வெளியேறியதாகவும் அதன் பிற்பாடு கட்சியுடன் எந்தவித தொடர்பினையும் ஏற்படுத்தவில்லை எனவும் மு.கா. முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறு வெளிநடப்புச் செய்த உறுப்பினர்களே ஐ.ம.சு.கூட்டமைப்பு பட்டியலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த வாரம் மு.காவின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் வடமேல் மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான யெஹியா ஆப்தீன் கட்சி மீது அதிர்ப்தி கொண்டு அரசாங்கத்தோடு இணைந்துகொண்டார்.

அவர் வடமேல் மாகாண சபைத்தேர்தலி ஐ.ம.சு.கூ சார்பாக புத்தளத்தில் போட்டியிடுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.(v.v).

0 comments :
Post a Comment