பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பேசிப் பயன் இல்லை-ஜனாதிபதியை சந்திக்க மறுப்பு

ஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பஸ் சங்கத்திற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (08) இடம்பெறவுள்ளது. 

இன்று (08) மாலை இக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தனியார் போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பில் பஸ் சங்கம் மற்றும் போக்குவரத்து அமைச்சு, செயலாளர், தனியார் போக்குவரத்து சங்கம் என பல அமைப்புக்களும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டன.

எனினும் பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் ஜனாதிபதியுடன் இன்று இடம்பெறவுள்ள சந்திப்பை தொடர்ந்து இப்பிரச்சினை தொடர்பில் ஒரு முடிவை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தனியார் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

எப்படியிருப்பினும் இந்த பேச்சுவார்த்தையில் தாம் கலந்து கொள்ளப்போவதில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

கலந்துரையாடல்களில் பயன் இல்லை அச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.

இந்த வாரத்திற்குள் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை எனின் நாடளாவிய ரீயில் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :