வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்கு யாதிக ஹெல உறுமய இன்று (08) விசேட கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இம் மாகாண சபைகளுக்கான தேர்தலில் அக் கட்சி தனித்து போட்டியிடுவதாக அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்தார்.
இதேவேளை குறித்த மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கான தமது கட்சிசார் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
இதற்கென 15 தொடக்கம் 21 பேர் அடங்கிய விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் தெரிவு எதிர்வரும் 15ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியும் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவு குழு எதிர்வரும் சில நாட்களில் நியமிக்கப்படவுள்ளதாக அக் கட்சியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

0 comments :
Post a Comment