இந்தியாவை மீறி இலங்கையால் எதுவும் செய்ய முடியாது

லங்கை இந்தியாவின் மாநிலம் அல்ல அது எமக்கும் நன்றாகத் தெரியும்.அதில் எமக்குச்சந்தேகமும் இல்லை. ஆனால் 13வது திருத்தச் சட்டத்தைப் பொருத்தமட்டில் இந்தியாவை மீறி இலங்கையால் எதுவும் செய்ய முடியாது.

தமிழ் மக்களுக்கு நியாயாமான ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டிய சர்வதேச ரீதியான கடப்பாடு இந்தியாவுக்கு உள்ளது என்பதுதான் நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்பும் விடயமாகும்.

இந்த விடயத்தில் யதார்த்த நிலையை புரிந்து கொள்ளாமல் அர்த்தமற்ற கோஷங்களை எழுப்பிக் கொண்டு,விடயம் புரியாமல் வீதியில் இறங்கி மக்களின் இயல்பு வாழ்வுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இனவாதக் கும்பல்கள் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டில் பெரும் கூச்சல்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ள 13வது திருத்தச் சட்ட விடயத்தில் உண்மையிலேயே அரசு ஒரு ஸ்திரமான நிலையில் இருந்தால் ஏன் பஷில் ராஜாக்ஷ அவசரமாக இந்தியா செல்ல வேண்டும்?

 அவர் அங்கு பேசிய விடயங்களை குறிப்பாக இந்தியா அவருக்கு என்ன கூறியது என்பதை நாட்டு மக்களுக்கு ஏன் மறைக்க வேண்டும்? வேளியே சொல்ல முடியாத அளவுக்கு இந்தியா அவருக்குகூறிய அல்லது அவர் இந்தியாவுக்கு கூறிய பரம இரகசியம்தான் என்ன? இவற்றை தெரிந்து கொள்ளும்.

உரிமை இந்த நாட்டு மக்களுக்கு இல்லையா?
13வது திருத்தத்தை உண்மையிலேயே நீக்க அரசுக்கு உத்தேசம் இருக்குமானால் ஏன் அரசு அதே சட்டத்தின் கீழ் இன்னும் மூன்று மாகாணங்களுக்கு தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளது? வட மாகாண சபை சர்ச்சைக்குரியது அது ஒரு புறம் இருக்கட்டும். ஏனைய இரண்டு மாகாணங்களுக்குமான ஆயுள் காலம் இன்னும் ஒரு சுமார் ஒரு

வருடம் இருக்கையில் அவற்றை கலைத்து இதே திருத்தத்தின் கீழ் தேர்தல் நடத்த அரசு முடிவு செய்தது ஏன்? 
ஒருபறம் பாராளுமன்ற தெரிவுக் குழு 13வது திருத்தம் பற்றி ஆராய இருப்பதாகக் கூறப்படுகின்றது. மறுபுறம் அதே 13வது திருத்தத்தின் மூலம் மேலும் மாகாண சபை தேர்தல்களை அரசு நடத்தவுள்ளது. 


இப்படி முரண்பாடுகளின் மொத்த வடிவமாகவே இன்றைய அரசு திகழுகின்றது.இந்த நிலை மாற வேண்டும் மக்களை குழப்பும் போக்கை அரசும் அதன் இனவாத ஆதரவு சக்திகளும் நிறுத்த வேண்டும்.

 உண்மையான நிலைமைகளை அரசு மக்களுக்கு உடனடியாகத் தெளிவு படுத்த வேண்டும் என்று அஸாத்சாலி கேட்டுள்ளார்.

தேசிய ஐக்கிய முன்னணி
ஊடக பிரிவு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :