நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி இளைஞன் உயிரிழப்பு

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று (07) அதிகாலை ஒரு மணியளவில் புத்தளம் - குருணாகல் வீதியில் கல்அடிய பிரதேசத்தில் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் லுணுவல உதாசிரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக லொறி வீதியில் நிறத்தி வைக்கப்பட்டிருந்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையிலேயே மோட்டார் வண்டியில் சென்றவர் லொறியுடன் மோதுண்டுள்ளார்.

இதன்போது காயமடைந்த நபர் புத்தளம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை தம்புள்ளை - மாத்தளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

தனியார் பஸ் மற்றும் மோட்டார் வண்டி மோதுண்டதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் வண்டியில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் படுகாயமடைந்த இருவர் மாத்தளை மற்றும் கண்டி வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :