(றிஸ்கான் முஹம்மட்)
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த மீலாத் நபி விழா நேற்று கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி பலாஹ் அரபுக் கல்லூரி முதல்வர் அப்துல்லாஹ் ஹசரத் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது மீலாத் நபி விழா போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசிம், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் மற்றும் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், உலமாக்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

0 comments :
Post a Comment