21 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

ந்திய-இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வுகாணப்படும் என பஷில் ராஜபக்ஷ தெரிவித்து இரண்டு தினங்களுக்குள், மீண்டும் தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றிருக்கின்றனர். 

ஒரு மாத காலமாக இலங்கை சிறையில் இருந்து வந்த 49 மீனவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு ஊர் திரும்பினர். இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் நேற்று இரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களை அப்பகுதியில் இருந்து விரட்டியடித்தனர்.

அதன்பின் அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த 5 விசைப்படகுகளையும் அதில் இருந்த 21 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர். சிறைபிடித்து செல்லப்பட்ட மீனவர்கள் அனைவரும் மன்னார் கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :