தனுஷ் பிறந்த நாளைக் கொண்டாட லண்டனுக்குப்பயணம்

நாளை மறுநாள் தனுஷுக்கு 30வயது. இந்த பிறந்த நாளைக் கொண்டாட லண்டன் பறந்துவிட்டார், தனது நெருங்கிய நண்பர்களுடன் தனுஷ். தனுஷைப் பொறுத்தவரை இந்த ஆண்டு மறக்க முடியாதது.

அவரது முதல் இந்திப் படம் ராஞ்ஜனா பெரும் வெற்றி பெற்று, ரூ 100 கோடியை அள்ளியுள்ளுத. மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்துக்காக 2 பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். 

மரியான் படம் தமிழில் சரியாகப் போகவில்லை என்றாலும் அவர் நடிப்புக்கு ஏக பாராட்டுகள். எனவே மிக சந்தோஷமாக இந்த பிறந்த நாளை அவர் கொண்டாடுகிறார்.

தனுஷுடன் அவரது நெருங்கிய நண்பர்கள் நடிகர் சிவகார்த்திகேயன், சதீஷ் ஆகியோரும் செல்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத்தும் அவர்களுடன் பின்னர் கலந்து கொள்கிறார். வணக்கம் சென்னை படத்தின் பாடல் வெளியீடு சனிக்கிழமை முடிந்ததும் அன்று மாலை லண்டன் புறப்படுகிறார் அனிருத்.

அட்வான்ஸ் வாழ்த்துகள் தனுஷ்!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :