ஊடகவியலாளரின் இல்லம் மீதான தாக்குதலுக்கு ஆரிப் சம்சுடீன் விடுத்துள்ள கண்டன அறிக்கை.

(எம்.எம்.ஏ.ஸமட்)
ஊடகவியலாளர் முர்தளாவின் இல்லத்தின் மீதான தாக்குதல் பிராந்திய ஊடகவியலாளர்களின் எழுத்துச் சுதந்திரத்தை நசுக்கும் செயல்.

இவ்வாறு, ஊடகவியலாளரின் இல்லம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் விடுத்துடுள்ள கண்டன அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

இலங்கை சுதந்திர நாடு. இந்நாட்டில் ஊடக சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும். பிழையைப் பிழையென்றும் சரியைச் சரியென்றும் எழுதுபவர்கள்தான் ஊடகவியலாளர்கள்.

சரியை பிழையாகவும் பிழையைச் சரியாகவும் எழுதுபவர்கள் ஊடகவியலாளர்களாக, ஊடகத் தர்மத்துடன் செயற்படுபவர்களாக இருக்க முடியாது.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஊடகவியலாளர் முர்தளாவின் இல்லம் தாக்கப்பட்டதானது ஊடக சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே கருத வேண்டியுள்ளது.

ஊடகவியலாளர்கள் மதிக்கப்பட வேண்டும். அவர்களின் நலன்கள் பேணப்பட வேண்டும் அவர்களின் ஊடகச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதே எனது நிலைப்பாடாகும். இதன் நிமித்தம் கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற கிழக்கு மாகாண சபை மாதாந்த அமர்வின்போது தனிநபர் பிரேரனையொன்றையும் முன்வைத்திருந்தேன்.

மக்கள் பிரதிநிதி என்ற வகையிலும் ஒரு சட்டத்தரணி என்ற வகையிலும் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரியவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகின்றேன்.

முர்தளா போன்ற நீதி நியாயத்தை மக்கள் முன் சமர்பிக்கும் ஊடகவிலாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன் அவர்களின் எழுத்துச் சுதந்திரம் நசுக்கப்படாது சட்டம் நீதியான முறையில் அதன் கடமையினைப் புரியும் என்று நம்புவதுடன், இத்ததைகய அநாகரியமான செயல்கள் இதன்பின்னர் இப்பிராந்தியத்தில் ஏற்படாது தடுக்கப்படு அவசியமெனவும் அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :