ஜனாதிபதி சந்திக்க முடியாமல் தவிக்கும் முஸ்லிம் எம்.பி.க்கள் ஒன்றியம்; திட்டமிட்ட இழுத்தடிப்பா?


ஹியங்கனை பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளமை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் அவசர சந்திப்பொன்றை மேற்கொள்வதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் முயற்சித்து வருகின்ற போதிலும் அது இழுத்தடிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் புதன்கிழமை கூடிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை உடனடியாக சந்திக்க தீர்மானித்திருந்தனர்.

இந்த சந்திப்பை ஏற்பாடு செய்யும் பொறுப்பு ஒன்றியத்தின் தலைவரான அமைச்சர் பௌஸியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அவர் இதற்காக நேரம் ஒதுக்கித் தருமாறு ஜனாதிபதியை கேட்டுள்ள போதிலும் அதற்கான சந்தர்ப்பம் இன்னும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

முஸ்லிம் சமூகத்தின் முக்கிய விவகாரம் தொடர்பில் உடனடியாக ஜனாதிபதியை சந்திக்க முடியாமல் இருப்பதும், மஹியங்கனை பள்ளிவாசல் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதும் மிகப்பெரும் கவலைக்குரிய விடயம் விசனம் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :