சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதருக்கு கௌரவிப்பு!

























மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான பி.எம்.எம்.ஏ.காதர் அவர்களின் ஊடக சேவையைப் பாராட்டி கௌரவித்த நிகழ்வு வியாழக்கிழமை (04.07.2013) மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது .

இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிஸாம், ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

அதிபர் ஏ.ஆர்.எம்.தௌபீக், பிரதி அதிபர் எம்.எம்.எம்.முஷர்ரப், பாடசாலை அபிவிருத்தி சபையின் செயலாளர் என்.எம்.எம்.இஸ்மாயீல்,பழைய மாணவர் சங்கச் செயலாளரும் கல்முனை மாநகர சபையின் ஆணையாருமான ஜே.லியாகத் அலி ஆகியோர் இந்த கௌரவிப்பு நிகழ்வில் இணைந்து கொண்டார்கள்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர், 25 வருட ஊடக சேவையை இவ்வருடம் பூர்த்தி செய்கிறார். இவர் இதுவரை 300க்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளதுடன் 200க்கு மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வெளியாகின்ற அனைத்துத் தமிழ்ப் பத்திரிகைகளுக்கும் பல இணையத்தளங்களுக்கும் ஊடகவியலாளராகப் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மெட்ரோ மிரர் இணையத்தள செய்திச் சேவையின் ஆரம்ப காலம் தொடக்கம் அதன் சிறப்பு செய்தியாளராக பணியாற்றி வருகின்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் அவர்கள், மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி கல்விச் சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டிருப்பதையிட்டு மெட்ரோ மிரர் முகாமைத்துவ சபை மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :