இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பட்ணாவிலிருந்து 110 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள புத்தபாயாவின் மஹாபோதி விகாரை வளாகத்திற்கருகில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பில் இரு உல்லாசப் பயணிகள் உட்பட ஐவர்
காயமடைந்துள்ளனர்.
விகாரை வளாகத்திலும் மஹாபோதி மரத்திற்கு அருகிலும் காலை 5.30 இற்கும் 6 மணிக்கும் இடையே அடுத்தடுத்து இவ்வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாக காயா பொலீஸார் தெரிவித்தனர்.
மகாத் பிதேசத்திற்குப் பொறுப்பான பிரதி பொலீஸ்மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலீஸ் அதிகாரிகள் உலக மரபுரிமைச் சொத்தாகக் கருதப்படும் மஹாபோதி விகாரைக்கு விரைந்தனர். பட்ணாவிலிருந்து தடயவியல் நிபுணர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த இரு திபெத்திய யாத்திரிகர்கள் காயாவிலுள்ள ஏ.எம் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர். படையினரும், தீயணைப்பு குழுவினரும் ஸ்தலத்திற்கு விரைகின்றனர்.
மஹாபோதி விகாரை பயங்கரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் இருந்ததோடு கடந்தவாரம் இந்திய உளவுத்துறை இது தொடர்பில் எச்சரிக்கையும் விடுத்திருந்தது. குறித்த விகாரை 2002ஆம் அண்டு யுனெஸ்கோவினால் உலக மரபுரிமைச் சொத்தாகப் பெயரிடப்பட்டது.
இந்த இடத்தில் புனித வெள்ளரச மரமும் அதேபோன்று பிரம்மாண்டமான புத்தர் சிலையும், அவர் பரிநிர்வாணம் அடைந்த பின்னர் தங்கியிருந்ததாக நம்பப்படும் இடங்களில் நினைவிடங்களும் உள்ளன.
குறித்த மரத்தின் கீழ் தியானம் மேற்கொண்டதன் பின்னர் பிரச்சாரத்திற்காக தனது வாழ்கையை அர்ப்பணித்ததாகவும் தனது 80ஆவது வயதில் மரணிப்பதற்கு முன்னதாக பிக்குகள் குழுவொன்றை தாபித்ததாகவும் கூறப்படுகிறது.

0 comments :
Post a Comment