தரையிறங்கும் போது சுவரில் மோதி தீப்பற்றிய விமானம் : இருவர் பலி


மெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் போயிங் 777 ரக மிகப் பெரிய பயணிகள் விமானம் ஓடுதளத்தின் காம்பவுண்ட் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருவர் பலியாகியுள்ளதோடு, 150 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் விமான நிலையம் மூடப்பட்டது.

தென் கொரியாவின் சியோல் நகரத்தில் இருந்து 300 பயணிகளை ஏற்றி கொண்டு ஆசியனா ஏர்லைன்ஸ் போயிங் 777 ரக விமானம் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகருக்கு வந்தது.

இது அமெரிக்க விமானங்களிலேயே 2வது மிகப் பெரிய பயணிகள் விமானமாகும். இது வழக்கம் போல் 28ஆவது ஓடுதளத்தில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது.

அப்போது ஓடுதளத்தில் தரையிறங்கிய சில வினாடிகளில் அதன் வால் பகுதி காம்பவுண்ட் சுவரில் மோதியது. இதில் விமானத்தின் வால் பகுதி உடைந்து தீப்பிடித்து கொண்டது.

மேலும், விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடு பாதையில் விழுந்து நொறுங்கியது. இதனால் பயணிகள் அலறி அடித்து கூச்சல் போட்டனர். உடனடியாக விமான நிலையத்தில் இருந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

அதற்குள், விமானத்தில் இருந்து அவசர கதவு வழியாக பயணிகள் சிலர் கீழே குதித்தனர். இதில் பலர் காயம் அடைந்தனர். தீயணைப்பு படையினரும், மீட்பு படையினரும் பயணிகளை மீட்டனர்.

இந்த விபத்தில் 150க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் ஏற்பட்ட தீயில் கருகி 2 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

காயம் அடைந்தவர்களில் குழந்தைகள் உள்பட 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தை அடுத்து விமான நிலையம் மூடப்பட்டது.

அடுத்தடுத்து வந்த விமானங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன. விபத்துக்கான காரணம் குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :