உத்தரகண்ட்டில் நிவாரணப் பொருட்களை திருடிய அரச அதிகாரி!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் நிவாரணப் பொருட்களை திருடிய அரச அதிகாரி ஒருவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளம், நிலச்சரிவால் சீர் குலைந்துள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிப்போருக்கு வழங்குவதற்காக அரச கரூவூலத்தில் நிவாரணப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.

அந்த பொருட்களை கரூவூல அதிகாரி ஒருவர் திருடி தனது கார் மூலம் வீட்டுக்கு எடுத்துச் சென்றது அங்குள்ள கேமராவில் பதிவாகி இருந்தது.இது குறித்து அளிக்கப்பட்ட புகாரை அடுத்து அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தி நிவாரணப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து அந்த அதிகாரியை உத்தரகண்ட் அரசு உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.நிவாரண பொருட்களை அரசு அதிகாரி ஒருவர் திருடி சிக்கியுள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :