பாசிச மத வெறி பிடித்த மோடி இந்தியாவுக்கு பிரதமரா ஒருகாலும் நடக்காது-தமுமுக


(ஜே எஸ் ரிபாயி)
பாசிச மத வெறிக்கு பலியான மக்களை நாய்க் குட்டிகளோடு ஒப்பிடுவதா? அனைத்து மக்களும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக வாழும் இந்தியாவை தலைமை ஏற்க மோடி தகுதியற்றவர்: மோடியின் பேச்சுக்கு தமுமுக கடும் கண்டனம்

தமுமுக தலைவர் ஜே எஸ் ரிபாயி வெளியிடும் கண்டன அறிக்கை

இந்நாட்டின் மிகப்பெரிய இனப்படுகொலையான குஜராத் இனபடுகொலையின் சூத்ராதாரியான 2000க்கும் மேற்பட்ட அப்பாவி சிறுபான்மை சமூக மக்களை கொடூரமாக கொன்ற கொலைப்படையின் தலைவராக வளம்வரும் மோடி அந்த படுகொலை குறித்தும் 2000க்கும் மேற்பட்ட மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டது குறித்தும் தனது உண்மயான எண்ணவோட்டத்தை வெளியிட்டுள்ளார். 

பாசிச மதவெறி வன்முறைக்கு பலியான மக்களை நாய் குட்டிகளோடு ஒப்பிட்டு மனிதநேயம், மதசார்பின்மை, நாகரீக அரசியல் அனைத்தையும் இழிவுபடுத்தியுள்ளார். மோடியும் மோடியை உயர்த்தி பிடிப்பவர்களும் இந்த இழி கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்.

இந்த நூற்றாண்டின் மாபெரும் இனபடுகொலை குறித்து மோடி தெரிவித்தகருத்துக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை. இது பலியான அப்பாவி சிறுபான்மை மக்களை மட்டுமல்ல, இந்நாட்டில் வாழும் முப்பது கோடி முஸ்லிம்களையும், அனைத்து இந்தியர்களையும் உலகில் வாழும் நாகரிக சமூக மக்கள் ஒவ்வொருவரையும் இழிவுபடுத்தும் செயல் ஆகும். மலிவு விளம்பரத்திற்காக தான் ஒரு இந்து தேசியவாதி எனக் கூறும் மோடிக்கு மதச் சார்பின்மையை போற்றும் இந்தியாவின் பிரதமராக விரும்புவதற்குகூட தகுதி இல்லாதவர். 

இந்தியா போன்ற பல்சமூக மக்கள் ஒற்றுமையாக வாழும் நாட்டில் மோடி தலைமைத்துவத்திற்கு கூட தகுதி படைத்தவர் அல்ல. இந்திய மக்கள் அனைவரும் மோடியை புறக்கணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :