அஜீத்தை சிறிய நடிகர் என தப்புக்கணக்கு போட்டுவிட்டேன் என்கிறார் ஷாரூக்கான்

மிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் அஜீத். அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அதோடு சினிமா உலகில் நிறையபேருக்கு உதவிகள் செய்கிறார்.

இதனால் அவரை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பிடிக்கிறது ஆனால், இப்போது மாநிலம் கடந்து அஜீத்தை பெருமையாக பேசத் தொடங்கிவிட்டார்கள். அப்படித்தான் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ஸ்ரீதேவிக்காக சிறிய ரோலில் நடித்த அஜீத், அதற்காக சம்பளமே வாங்கிக்கொள்ளவில்லை. 

அதனால், அந்த நன்றிக்கடனை இன்றுவரை மறக்காத ஸ்ரீதேவி, அஜீத்தை பெருமையாக சொல்வதோடு, அவருடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருப்பதாகவும் கூறி வருகிறார்.


இந்தநிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஷாரூக்கான் இந்தியில் நடித்த அசோகா என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அஜீத் நடித்திருந்தார். ஆனால் அதற்காகவும் அவர் சம்பளமே வாங்கிக்கெள்ளவில்லையாம். 

அதை சமீபத்தில் நினைவுகூர்ந்துள்ளார் ஷாரூக்கான். அப்போதைக்கு அஜீத்தை நான் சிறிய நடிகர் என்றுதான் நினைத்தேன்.

 ஆனால் சமீபகாலமாக தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற பிறகுதான் அவர் பெரிய ஹீரோ என்பதை தெரிந்து கொண்டேன். 

ஆனபோதும், எந்த பந்தாவும் இல்லாமல் எளிமையாக அவர் என்னுடன் பழகி என் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார் என்று அஜீத் பற்றி சொல்கிறார் ஷாரூக்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :