தமிழினியின் திருமணத்தில் சாட்சியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணிப் பொறுப்பாளர் தமிழினி, மிக விரைவில் திருமணம் முடித்து ஐரோப்பாவில் குடியேறவுள்ளதாக லங்காபுவத் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்நாட்டுப் போர் நிலவிய காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து ஐரோப்பாவிற்கு இடம்பெயர்ந்த வர்த்தகர் ஒருவரே தமிழினியைத் திருமணம் முடிப்பதற்கு முன்வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாகவே வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்தும் தமிழினி கடைசி நேரத்தில் விலகிக் கொண்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
மிக விரைவில் கொழும்பு அலரி மாளிகையில் நடைபெறவுள்ள தமிழினியின் திருமணத்தில், அவர் தரப்பு சாட்சியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சாட்சிக் கையெழுத்து போடத் தயாராக இருப்பதாகவும் குறித்த செய்தி வட்டாரங்களிலிருந்து மேலும் தெரிய வந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :