புத்தகாயா மீதான தாக்குதல் மிலேச்சத்தனமானது- ஜுனைட் நளீமி

ன்று இந்திய பீகார் மாநில புத்தகாயாவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் மிலேச்சத்தனமானதாகும். மதங்களையும், வணக்கஸ்தலங்களையும் யாத்திரீகர்களையும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கின்றது.

அடுத்தவர்களது மதக் கடவுள்களைக்கூட நிந்திக்க வேண்டாம் என்ற இஸ்லாத்தின் கோட்பாடு மதச்சகிப்புத்தன்மையின் வெளிப்பாடாகும்.

மதங்கள் ஆன்மீகத்தையும் நல்லொழுக்கங்களையுமே போதிக்கின்றன. இந்தவகையில் தமது குறுகிய அரசியல் இலாபங்களுக்காக வணக்கஸ்தலங்களை தாக்குவதும், மதங்களின் கலாச்சார விழுமியங்களை வன்முறைக்குற்படுத்துவதும், இனம் என்ற போர்வையில் கிட்லரின் தூயவாதம் பேசி சிறுபான்மை மீதான அடக்கு முறை மேற்கொள்ளலும் கண்டிக்கப்படுவதுடன் இத்தகையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அத்தோடு இத்தகைய பயங்கரவாத செயல்கள் இடம்பெற இடம்கொடுக்காது மக்கள் விழிப்புடன் செயற்படுவதும் அவசியமாகும். இந்தவகையில் குறித்த சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரும் விரைவில் சுகம் பெற பிரார்த்திக்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :