25 விரல்களைக் கொண்ட ஆண் குழந்தை - வைத்தியர்கள் ஆச்சரியம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த பெத்தவேளாண்கோட்டகம் கிராமத்தை சேர்ந்த சின்னையன் மகள் சித்ரா (25). இவருக்கும் மன்னார்குடி அடுத்த கோவில் கலப்பால் கிராமத்தை சேர்ந்த பக்கிரிசாமி மகன் பகத் (33) ஆகியோருக்கு,கடந்த2011ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி திருமணம் நடந்தது.

இரண்டு ஆண்டாக குழந்தை பாக்கியம் இல்லாததால் மிகுந்த வருத்தம் அடைந்த இவர்கள்,பல கோயில்களில் வேண்டிக்கொண்டனர். 

கடந்த ஆண்டு சித்ரா கர்ப்பம் ஆனார். சித்ரா கர்ப்பம் அடைந்த செய்தியை கண்டு உறவினர்கள் பெறும் மகிழ்ச்சி அடைந்து குல தெய்வ வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.

இந்த நிலையில் கடந்த 16ம் தேதி சித்ராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 17ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. நல்ல சிகப்பு நிறத்தில் பிறந்த குழந்தையை கண்டு டாக்டர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

குழந்தையின் வலது கையில் 7விரலும், இடது கையில் 6 விரலும், இரு கால்களிலும் தலா 6 விரலும் ஆக மொத்தம் 25 விரல்கள் இருப்பதை கண்டு ஆச்சிரியம் அடைந்தனர்.

இந்த அதிசிய குழந்தையின் தகவல் அறிந்த உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்து மருத்துவமனையில் காணுவதற்கு கூடினர். 

இதனால் மருத்துவமணைக்கு இடையூறு ஏற்படும் என்பதால் வெளியில் சொல்லமால் ரகசியம் காத்தனர். இந்த நிலையில் பெத்தலாம் கோட்டம் கிராமத்தில் இந்த குழந்தை அதிஷ்ட குழந்தையாக கருதி குழந்தை வருகைக்காக காத்திருந்தனர். 

மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வியாழக்கிழமை காலை பெத்தலாம்கோட்டம் கிராமத்திற்கு வந்த இந்த அதிசிய குழந்தையையும் பெற்றோர் பகத் மற்றும் சித்ராவையும் ஆராத்தி எடுத்து வரவேற்றனர்.

இது குறித்து குழந்தையின் தந்தை பகத் கூறுகையில், எனது குழந்தையின் அதிசியத்தை கண்டு மிகுந்த சந்தோசத்தில் இருக்கிறோம். எனது சகோதரர் மோகனின் மகனுக்கும் தலா ஆறு விரல்கள் வீதம் 24 விரல்கள் உள்ளன என்றார்.

கிராமத்தை சேர்த்த நாகவள்ளி, நாகலெட்சுமி ஆகியோர் கூறுகையில், இந்த அதிசிய குழந்தை எங்க கிராமத்திற்க்கு கிடைத்த பொக்கிஷம். இதனால் எங்கள் கிராமமே மகிழ்ச்சியில் இருக்கிறோம் என்றார்கள். பகத் - சித்ரா திருமண தேதி 17இந்த அதிசிய குழந்தை பிறந்த தேதியும் 17என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :