டி 20தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணி முதலிடத்தில்.

ர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட டி 20தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்திய அணி தொடர்ந்தும் 3வது இடத்தில் இருக்கிறது. ஜூலை 27-ந் தேதியன்று பாகிஸ்தான்,மேற்கிந்திய தீவுகளிடையே 2 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்கு முன்னதாக இன்று டி 20 தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் 134 புள்ளிகளுடன் இலங்கை அணி முதலிடத்திலும், 127 புள்ளிகளுடன் மேற்கிந்திய தீவுகள் அணி 2வது இடத்திலும் இருக்கின்றன. இந்திய அணி121 புள்ளிகளுடன் தொடர்ந்து3வது இடத்திலேயே இருக்கிறது.

118 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 4, 113 புள்ள்களுடன் இங்கிலாந்து 5, தென்னாப்பிரிக்கா 112புள்ளிகளுடன் 6வது இடத்தைப் பிடித்துள்ளன. மொத்தம் 16 நாடுகளில் ஆப்கானிஸ்தானும் கனடாவும் போதுமான போட்டிகளில் விளையாடவில்லை. இதனால் 14 அணிகளைக் கொண்டே தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :