
(எம்.பைஷல் இஸ்மாயில்)
அண்மைக்காலமாக கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில்மோட்டார் பைசிக்கிள்கள் தொடராக இனம் தெரியாதோரினால் களவாடிச்செல்லப்படுவதாக பொதுமக்களினால் கல்முனை பொலிசாருக்குதொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.
இக்களவினை கட்டுப்படுத்த கல்முனை பொலிஸார் பொதுமக்களுடன்இணைந்து சில செயற்திட்டங்களை முன்னெடுத்து வருவதற்காகபொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக கல்முனை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஏ. டபிள்யு. ஏ.கபார் தெரிவித்தார்.
கல்முனை பொலிஸ் நிலையம் சிவில் பாதுகாப்புக் குழு அங்கத்தவர்களுடனும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது அமைப்புக்களுடனும் இணைந்து மோட்டார் பைசிகிள் திருட்டுச் சம்பவங்களை தடுப்பது மற்றும் சம்பந்தப் பட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலான விழிப்பூட்டல் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதுடன் பலவிடயங்களை உள்ளடக்கிய துண்டுப் பிரசுரம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
மோட்டார் பைசிக்கிள்களை பாதுகாப்பான இடத்தில் வைப்பதுடன் ஹென்டில் பூட்டு போடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளல் பைசிகிள் தரிப்பிடத்தில் நீண்ட நேரம் தனிமைப்படுத்தாமல் இருத்தல்இஅடிக்கடி பைசிகிளை நோட்டமிடுதல்இ பைசிகிள் டயரில் உள்ள இலக்கத்தைகுறித்து வைத்துக் கொள்வதுடன் பதிவுப்புத்தகம் அனுமதிப்பத்திரம் காப்புறுதிப்பத்திரம் புகைப்பரிசோதனை சான்றிதழ் என்பவற்றைதங்களுடன் வைத்துக்கொள்ளல் மிக அவசியம்
எனவும் பைசிகிள் காணாமல்போகுமிடத்து உடனடியாக பொலிஸாருக்கு தெரிவித்தல் மற்றும்சந்தேகத்திற்கு இடமான முறையில் பைசிகிள் நிறுத்தப்பட்ட இடத்தில் நடமாடுபவர் பற்றிய தகவல்களை பொலிஸாருக்கு அறிவித்தல்தொடர்பாகவும் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் அந்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பொதுமக்கள் பொலிசுடன் ஒத்துழைப்புத் தந்தால் மாத்திரமே குறிப்பிட்ட திருடனை பிடிக்க முடியும் என கல்முனை பொலிஸ் நிலையப்பொறுப்பதினாரி மேலும் தெரிவித்தார்.
இவ்வாறு பொதுமக்கள் பொலிசுடன் ஒத்துழைப்புத் தந்தால் மாத்திரமே குறிப்பிட்ட திருடனை பிடிக்க முடியும் என கல்முனை பொலிஸ் நிலையப்பொறுப்பதினாரி மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment