மட்டக்களப்பு-கல்முனை வீதியில் ஆலயம் ஒன்றில் 19 விக்ரகம் 25பவுன் நகை கொள்ளை.


மட்டக்களப்பு, கல்முனை, குருக்கள்மடம் பிரதான வீதியிலுள்ள களுவாஞ்சிக்குடி ஸ்ரீ செல்லக் கதிர்காமம் ஆலயத்தின் 19 விக்கிரகங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன.

நேற்று (01) இரவு 10 மணியின் பின்னதாக கோயிலின் விக்கிரகங்கள் இனந்தெரியாதோரினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக ஆலய பூசகர் தெரிவித்தார்.

இதன்போது ஆலயத்திலிருந்து பெரும்பாலான விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் 25 பவுண் நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்நாயக்க கோயிலுக்குச் சென்று இச்சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா.அரியநேந்நதிரன், சி.யோகேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் ஆகியோர் நேரில் சென்று நிலமைகளை கேட்டறிந்து கொண்டதோடு இதன் சூத்திர தாரிகளை உடனடியாக கைது செய்வதறகு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிக்குடி பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்நாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :