(சுரேன் திருக்கோவில்)
கிழக்கு மாகாணத்தின் எல்லைப்பகுதியான பாணமைக் கிராமத்தில் அமையப்பெற்ற ஒரு தமிழ் பாடசாலை, திகோ.பாணமை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையாகும். இப்பாடசாலை மாணவர்களின் நலன்கருதி சவால்களை வெற்றி கொள்ளும் வகையில் கணணி அறிவினை மேம்படுத்தும் நோக்கோடு கணணி ஆய்வுகூடத்திற்காக முப்பத்தைந்து லெட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் பெற்றோர்களின் விருப்புக்கமைவாக மாணவர்களின் உதவியுடன் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டது.
இவ்விழாவில் அதிதிகள் வாத்திய இசையுடன் வரவேற்க்கப்பட்டு, மங்களவிளக்கேற்றல், இறைவணக்கம், தேசியகொடி, பாடசாலைக்கொடி ஏற்றல், அடிக்கல் நாட்டல், திரைநீக்கம், வரவேற்புரை, தலைமையுரை, மாணவிகள் நடனம், அதிதிகள்உரை, மாணவிஉரை, சிறப்புரை, நன்றிஉரை என்பன இடம்பெற்றது.
இவ்வேலைத்திட்டம் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் 'தேசத்திற்கு மகுடம்' வேலைத்திட்டத்திற்குச் சமாந்தரமாக தொலைத்தொடர்பு மற்றும் தகவல்தொழிநுட்ப அமைச்சர் கௌரவ ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களின் ஆலோசனையின் பேரில் அம்பாறை மாவட்ட செயலாளர் கௌரவ நீல் த அல்விஸ் அவர்களின் வழிநடத்தலினால் நிர்மாணிக்கப்படும் இக்கணணி ஆய்வுகூடம் திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் அவர்களின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சர் கௌரவ விமலவீர திசானாயக்கா அவர்களால் 2013 மே 31 ஆம் திகதி கணணி ஆய்வுகூடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நிகழ்ந்தது. இதில் பொத்துவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர், ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர், முந்நாள் லகுகல தவிசாளர், திருக்கோவில் வலய பொறியியலாளர்ஆகியோரும் கலந்து சிறப்பிதனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment