இளையதளபதி விஜய் நடிக்கும் தலைவா படத்தின் இசை வெளியீடு,


இயக்குனர் விஜய் இயக்கத்தில், இளையதளபதி விஜய் நடிக்கும் தலைவா படத்தின் இசை வெளியீடு இம்மாதம் 21-ம் திகதி நடைபெறவுள்ளது.

விஜய்யின் பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்பாக இந்த நிகழ்ச்சி நடக்கிறது. விஜய் - அமலா பால் ஜோடியாக நடித்துள்ள படம் தலைவா. இதில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ஸ்ரீமிஸ்ரி புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை வேந்தர் மூவீஸ் வெளியிடுகிறது. ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.

விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் திகதிக்கு ஒரு நாள் முன்பாக பாடல்களை வெளியிடுகிறார்கள். சோனி மியூசிக் நிறுவனம் இசை உரிமையைப் பெற்றுள்ளது.

இப்படத்தின் தமிழக, கர்நாடக, கேரள உரிமை பெரும் விலைக்கு விற்கப்பட்டுளது. வெளிநாட்டு உரிமை, விஜய் படத்துக்கு இதுவரை கிடைக்காத அளவுத்து நல்ல விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.

ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் படத்தை வெளியிடுகிறார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :