பல பகுதிகளுக்கு 24 மணிநேர நீர்விநியோகத்தடை தேவையான நீரை சேமித்து வையுங்கள்.


த்தளை மற்றும் களனி பிரதேசத்தில் பல பகுதிகளுக்கு 24 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று புதன்கிழமை 5ம் திகதி காலை 10 மணி தொடக்கம் நாளை வியாழக்கிழமை 6ம் திகதி காலை 10 மணிவரை இந்த நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.வத்தளை - ஹேக்கித்த வீதி மற்றும் அதனை அண்டிய குறுக்கு வீதிகள், ஹெந்தல வீதி மற்றும் அதனை அண்டிய குறுக்கு வீதிகள், நீர்கொழும்பு வீதி ஹேக்கித்த தொடக்கம் ஹெந்தல சந்திவரையான பிரதேசங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், களனி தெலகம்பான வீதி மற்றும் அதனை அண்டிய குறுக்கு வீதிகள் மற்றும் மீன்சந்தை பகுதி என்வற்றுக்கு நீர்விநியோகம் தடைப்படவுள்ளதென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :