மாளிகைக்காடு இக்றாஹ் கல்லுாரியின் 4வது வருடாந்த பரிசளிப்பு விழா இன்று
(04) செவ்வாய்க்கிழமை கல்லுாரி மண்டபத்தில் ஆங்கிலப்பாட விரிவுரையாளர்
முஹம்மட் ஜவாஹிர் தலைமையில் இடம்பெற்றது.
இக்கல்லுாரியின் ஸ்தாபகர் ஆசிரியர் எம்.ஏ. அஸ்வர் பிரதம அதிதியாகக்
கலந்துகொண்ட இந்நிகழ்வில் தரம் 01 தொடக்கம் 11 வரையான வகுப்புக்களில்
தவணைப்பரீட்சையில் திறமையினை வெளிக்காட்டிய 135 மாணவர்களுக்கு பரிசுகள்
வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இங்கு மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.பெரும் தொகையான
மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் மற்றும் இக்கல்லுாரியின் ஆசிரியர்களும்
கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கிவைத்தனர்.
பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பாரிய பங்களிப்பைச் செய்துவரும்
மாளிகைக்காடு இக்றாஹ் கல்லுாரி ஆசிரியர்களின் பணி பாராட்டப்பட
வேண்டியதாகும் என பெற்றோர்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment