5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான 03 நாட்கள் பயிற்சிப்பட்டறை


( அஹமட் ஜாபீர் )

ம்மாந்துறை சமூக நல மேம்பாட்டு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இவ்வாண்டு 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான 03 நாட்கள்
பயிற்சிப்பட்டறை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞானபீட
வளாகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சம்மாந்துறை சமூக நல மேம்பாட்டு ஒன்றியத்தின் தலைவர் எம். நஸீர்
தலைமையில் இடம்பெற்ற இப்பயிற்சி செயலமர்வில் சம்மாந்துறை
பிரதேசத்திலிருந்து எழுத்துப்பரீட்சை ஒன்றின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 200
மாணவர்கள் பங்குபற்றினர்.

இதன் ஆரம்ப விழாவில் தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி
எஸ்.எம். முஹம்மட் இஸ்மாயீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு
இப்பயிற்சிப்பட்டறையை ஆரம்பித்து வைத்தார்.

இந்த பயிற்சிப்பட்டறை இலங்கையின் தலைசிறந்த ஆசிரியர்களான சிரேஷ்ட
அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி, குட்டிசுட்டி ஆசிரியர் கியூ. வதன்,
செந்தமிழ் நுால் ஆசிரியர் ஏ.எம். முஹம்மட் றிபாஸ் ஆகியோரால்
நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இப்பயிற்சிப்பட்டறையின் முதல்நாள் நிகழ்வில் 5ம் தர புலமைப்பரிசில்
மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக நல மேம்பாட்டு
ஒன்றியத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :