(ஏ.எம். வலீத்)
சாய்ந்தமருது-மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் மாதாந்த பொதுக்கூட்டம்
அண்மையில் மாளிகைக்காடு பிஸ்mமில்லா ரெஸ்டோரன்டில் வர்த்தக சங்க தலைவர்
அல்-ஹாஜ் எஸ்.எச்.நஸீர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் விஷேட அதிதியாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
ஏ.டவுள்யூ.ஏ.ஹபார் மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.வாஹிட் மற்றும்
வர்த்தக சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சாய்ந்தமருது நகருக்குள் வர்த்தக நடவடிக்கைக்காக வரும்
வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் வாகனங்களை ஒழுங்கு
முறைப்படி நிறுத்துதல் மற்றும் நகரை அழகு படுத்தல் பற்றி
கலந்துரையாடப்பட்டதுடன் இதற்கு வர்த்தகர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
என கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டவுள்யூ.ஏ.ஹபார் கேட்டுக்
கொண்டார்.
மேலும் தற்போது கல்முனை பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிள் திருட்டு
அதிகரித்துள்ளது. ஆகவே வர்த்தகர்கள் சந்தேகம் வரும்படி ஏதும்
அவதானித்தால் உடன் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கவும் என அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.
0 comments :
Post a Comment