தன்னுடன் படிக்கும் நண்பனின் 36வயது அம்மாவை கர்ப்பமாக்கிய 11 வயது நண்பன்.



நியூசிலாந்தில் 36 வயதுப் பெண்ணை கர்ப்பமாக்கியுள்ளான் 11 வயது சிறுவன். தன்னுடன் படிக்கும் தோழனின் அம்மாவைத்தான் இவன் கர்ப்பமாக்கி ஒரு குழந்தைக்கும் தந்தையாகியுள்ளான். 

இதையடுத்து அந்தப் பெண் மீது கற்பழிப்பு வழக்குத் தொடர வேண்டும் என்று அந்த நாட்டில் கோரிக்கை கிளம்பியுள்ளது.

இதுவரை இப்படிப்பட்ட விவகாரங்களில் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க அங்கு போதிய சட்டம் இல்லாததையும் பலர் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுவனின் மனதைக் கலைத்து இதுபோன்ற காரியங்களில் ஈடுபடும் பெண்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மன நல ஆலோசகர்கள் எழுப்பியுள்ளனர். 

நியூசிலாந்தின் தற்போதைய சட்டப்படி ஆண்கள் மீது மட்டுமே கற்பழிப்பு வழக்குகளைத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெண்கள் மீதும் கற்பழிப்பு வழக்குகளைப் பதிவு செய்யும் வகையில் சட்டத் திருத்தம் தேவை என்ற கோரிக்கை வலுத்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண் மற்றும் சிறுவனின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. 

இருவரும் ஆக்லாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அந்தப் பையனின் பள்ளி முதல்வர் கூறுகையில், இந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்து விட்டேன். 

என்னிடம் வந்து நடந்ததைக் கூறினான். அதைக் கேட்டு நான் உறைந்து விட்டேன். நான் எனது தோழனின் தாயுடன் செக்ஸ் வைத்துள்ளேன். அது தவறு என்று தெரிகிறது. அதை நான் நிறுத்த வேண்டும் என்று அவன் சொன்னான்.

அந்த சிறுவன் மூலம் அப்பெண் கர்ப்பமடைந்து குழந்தையும் பெற்றுள்ளார் என்பது பின்னர் தெரிய வந்து நான் மேலும் அதிர்ச்சியானேனன் என்றார் அவர். நியூசிலாந்து சட்டப்படி ஆண்கள் மீது தொடரப்படும் கற்பழிப்பு வழக்குகளில் அதிகபட்ச தண்டனை 20 ஆண்டுகளாகும். 

அதேசமயம், ஆண்களை வற்புறுத்தி செக்ஸ் வைத்துக் கொள்ளும் பெண்கள் மீது வழக்கு தொடரப்பட்டால் அதிகபட்சம் 14 ஆண்டுகள் வரை கிடைக்கும். ஆனால் அது கற்பழிப்பு என்ற பிரிவின் கீழ் வராதாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :