ஹரீசின் அழைப்பில் கல்முனைக்கு பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் குழுவினர்.

(ஏ.எம். அஜாத்)

திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத்தொகுதி அபிவிருத்தி
ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸின் அழைப்பின்பேரில்
பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட
அபிவிருத்திக் குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
தலைமையிலான குழுவினர் சாய்ந்தமருது வொலிவேரியன் கிராம சுனாமி
வீட்டுத்திட்ட பணிகளை நேற்று செய்வாய்க்கிழமை (04) பார்வையிட்டனர்.

இதன்போது, சவூதி அரேபியாவின் இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும்,
விசேட சட்ட ஆலோசகருமான சட்டத்தரணி யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித்,
சவுதி அரேபிய நாட்டில் இருந்து வருகைதந்த டாக்டர் அய்மன் ஆகியோர் அடங்கிய
குழுவினரே மேற்படி விஜயத்தின்போது வருகை தந்திருந்தனர்.

இங்கு இவ்வீட்டுத்திட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தேவைகள்
தொடர்பாக பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ் வினவியபோது, பாதைகள் அபிவிருத்தி,
குடிநீர், மின்சாரம் என்பன இன்னும் வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும், ஆனால்
இவ்வீட்டுத்திட்ட பணிகளை முடித்து அடுத்த 2 மாதங்களுக்குள் பிரஸ்தாப
மக்களிடம் வழங்க முடியும் எனவும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர்
ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.

இந்த வருகையின்போது சட்டத்தரணி யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித்,
சவுதி அரேபிய நாட்டில் இருந்து வருகைதந்த டாக்டர் அய்மன், பொருளாதார
அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண
சபை உறுப்பினர் சிப்லி பாரூக், திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினரும், கல்முனைத்தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்
தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ், பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் உட்பட
பிரதேசவாசிகளும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :