IPL தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதப் போவது யார்.?


டப்பு ஐபிஎல் 6வது தொடரின் இறுதிப் போட்டியில் தகுதி பெற்றுள்ளசென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதப் போவது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியா? மும்பை இந்தியன்ஸ் அணியா? என்பதற்கான போட்டி இன்று நடைபெற உள்ளது.

நடப்பு ஐ.பி.எல். 6வது தொடர் கடந்த மாதம் 3ஆ் திகதி தொடங்கியது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்று விளையாடின. கடந்த 19ஆம் திகதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.

லீக் முடிவில் சென்னை சூப்பர்கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 4 அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், புனே வாரியர்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் ஆகியவை வெளியேற்றப்பட்டன.

பிளேஆப் தகுதி சுற்றில் நடந்த குவாலிபையர்-1 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோற்றதால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வெளியேறியது.

குவாலிபையர்-2 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

இன்று வெற்றி பெறும் அணிதான் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதும்.

மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சமபலம் பொருந்தியவை என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும். இரண்டு அணிகளும் 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றால் 2008 ஐபிஎல் நிலைமையும் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால் 2010 ஐபிஎல் நிலைமையும் திரும்பும்.

2008-ம் ஆண்டு ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. ராஜஸ்தான் கிண்ணத்தை வென்றது.

2010-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸும் மும்பை இந்தியன்ஸும் மோதின. இதில் சென்னை கிண்ணத்தை வென்றது.

தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுவது ராஜஸ்தானா? மும்பையா? என்பது இன்று தெரியவரும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :