அதிகமான வாகன விபத்துக்கள் சம்மாந்துறையில் நடைபெறுகின்றன-அஜித் ரோகன


டந்த வருடம் 2012 ம் ஆண்டு சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவு இலங்கையில் ஆகக்கூடிய வாகன விபத்துக்களைப் பதிவு செய்துள்ளது என்று அம்பாறைப் பொலிஸ் சுபிரின்டனும் முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான (Ampara Senior Police Suprintendant and Former Media Speaker) அஜித் ரோகன தெரிவித்தார்.

சம்மாந்துறை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர் சபையில் உரையாற்றிய அஜித் ரோகன மேலும் தெரிவித்ததாவது கடந்த வருடம் நாடு முழுவதும் உள்ள 431 பொலிஸ் நிலையங்களால் சமர்பிக்கப்பட்ட வாகன விபத்துப் புள்ளி விபரத்தின்படி சம்மாந்துறை பொலிஸ் பிரிவால் ஆகக்கூடிய 64 வாகன விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அஜித் ரோகன அவர்கள் இதை ஒழிப்பதற்கு ஒரு வழி வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை உரையில் இதைப்பற்றிய அறிவுரைகளையும், எச்சரிக்கைகளையும் தெரியப்படுத்துவதே என்று மேலும் அவர் கூறினார்.

இந்த நம்பிக்கையாளர் சபை கூட்டத்தை ஒழுங்கு செய்தவர் சம்மாந்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் (Acting OIC) சம்சுதீன் அவர்கள் என்பது குறிப்பித்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :