கிரிக்கெட் சூதாட்ட விடயத்தில் சிறைச் சென்றுள்ள ஸ்ரீசாந்த் நடித்த சினிமா காட்சிகள் நீக்கம்.

கிரிக்கெட் சூதாட்ட விடயத்தில் சிக்கி சிறைச் சென்றுள்ள ஸ்ரீசாந்த், மலையாளப் திரைப்படம் ஒன்றில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.

பிரபல மலையாள கவிஞரும் இசையமைப்பாளருமான கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி இயக்கத்தில் உருவாகும் 'மழவில்லினட்டம் வரே' (வானவில்லின் நுனி வரை) என்ற படத்திலே நடித்திருந்தார்.

'ஸ்பாட் பிக்சிங்' சூதாட்ட சர்ச்சையில் ஸ்ரீசாந்தின் பெயர் இடம் பெற்றவுடன் அவர் நடித்த காட்சிகளை நீக்கி விட்டதாக படத்தின் இயக்குநர் நேற்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி கூறுகையில், ஸ்ரீசாந்த் இந்தியாவின் சிறந்த வேகப் பந்து வீச்சாளர்.

அவர் எனது நல்ல நண்பர்களுள் ஒருவர். எனவே, எனது படத்தில் அவரை கௌரவ கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தேன்.

தற்போது, வரும் செய்திகளை கருத்தில் கொண்டு அவர் நடித்த காட்சிகளை நீக்கி விட்டோம்.

பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் இந்தியாவிற்கு வரும் போது அவரது வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படுகிறது. இதை சுற்றித்தான் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.

இந்திய அணியின் வீரர்களில் ஒருவராக கௌரவ கதாபாத்திரத்தில் ஸ்ரீசாந்த் நடித்திருந்தார்.

லண்டனை சேர்ந்த இசையமைப்பாளர் அப்பாஸ் ஹசன் கதாநாயகனாகவும், அர்ச்சனா கவி கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகிறது என்று தெரிவித்துள்ளார்.N1st
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :