பாகிஸ்தானில் சென்ற வாரம் நடந்த பொதுத் தேர்தலில் கராச்சி தொகுதி ஒன்றில் வாக்குப்பதிவு முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அங்கு மறு வாக்குப்பதிவு நடக்கவிருந்ததற்கு சில மணி நேரங்கள் முன்பாக அவ்வூரில் உள்ள தனது வீட்டின் முன்பாக வைத்து ஸஹ்ரா சுடப்பட்டிருந்தார்.
பாகிஸ்தானில் நீதிக்கான இயக்கம் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான ஸஹ்ரா ஷாஹித் ஹுசைன் கொல்லப்பட்டதைக் கண்டித்துள்ள கட்சியின் தலைவர் இம்ரான்கான், அவரது கொலை இலக்குவைக்கப்பட்ட ஒரு பயங்கரவாதச் செயல் என்று தெரிவித்துள்ளார்.
கராச்சியில் வலுவாகவுள்ள எம்.கியு.எம். (முதாஹிதா குவாமி மூவ்மெண்ட்) கட்சியினர்தான் இந்த கொலைக்கு காரணம் என இம்ரான்கான் பழிசுமத்தினார்.
எம்.கியு.எம். கட்சியின் தலைவர் அல்தாஃப் ஹுசைன் ஊடகங்களில் பேசும்போதேகூட தனது கட்சித் தொண்டர்களுக்கு எதிராக அச்சுறுத்தல்களை விடுத்தார் என இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.
லண்டனில் உள்ள அல்தாஃப் ஹுசைன் வன்முறையைத் தூண்டும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார் என புகார் தெரிவித்திருந்தும் பிரிட்டிஷ் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என்றும் கான் குற்றம்சாட்டினார்.
(பிபிசி)

0 comments :
Post a Comment