மேடையில் பேசிக்கொண்டிருந்த சீமான் ஏன் தப்பி ஓடினார்.


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், தமிழகத்தின், கடலூரில் இன எழுச்சிப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால், திருமண மண்டபம் ஒன்றில் உள்ளரங்குக் கூட்டம் நடத்தி பேசினார் சீமான்.

இரவு பத்து மணிக்குள்ளாக பேச்சை முடித்து விட வேண்டும் என்று பொலிஸார் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தனர். 9 மணி முதல் 9.30 வரை இரு முறை கூட்டத்தை முடிக்கச் சொல்லி பொலிஸ் தரப்பில் அவசரப்படுத்தியுள்ளதாகதெரிகிறது.

ஆனால் 9.40 வரை நிர்வாகிகளே பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் பேச வந்தார் சீமான். அப்போது சுமார் 10 மணியாகி விட்டது.

எனவே பொலிஸார் 10 மணிக்கும் 10.10க்கும் 10.15க்கும் என மூன்று முறை மண்டபத்துக்குள் நுழைய முயற்சி செய்தனர்.

ஆனால், பொலிசாரை உள்ளே விட மறுத்தனர் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள். இதனால் அதிரடியாக 10.20 மணி அளவில் மண்டபத்துக்குள் நுழைந்த பொலிசார் மேடைப் பக்கம் சென்றனர்.

அதுவரை மேடையில் பேசிக்கொண்டிருந்த சீமான், பொலிஸைக் கண்ட நொடிப் பொழுதில், பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு விறுவிறுவென பக்கவாட்டுக் கதவு வழியே வெளியேறி, வேகமாக காரில் ஏறிப் பறந்துவிட்டார்.

பொலிஸாரோடு சேர்ந்து தொண்டர்களும், சீமானை மண்டபத்திற்குள் தேடினர். இதுவரை சீமான் மீது வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பதால் கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரிகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :