யாழ் செய்தியாளர்.
முதலாவது யாழ்ப்பாணம் சாரணர் துருப்பு என புகழ்பெற்ற மத்திய கல்லூரியின் சாரணர் துருப்பானது 1916ம் ஆண்டு வண பிதா செல்பி அவர்கள் மத்திய கல்லூரியின் அதிபராக இருந்த காலத்தில் வடக்கிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந் நிலையில் 97 ஆண்டுகள் நிறைவில் மத்திய கல்லூரியில் உருவாக்கம் பெற்றுள்ள கடற் சாரணர் துருப்பு மத்திய கல்லூரி வரலாற்றில் மிக முக்கிய மைல் கல்லாகும்.
இலங்கை வரலாற்றில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வடபகுதி மக்களுக்கு அறிமுகம் செய்த கிறிக்கட்,உதைபந்தாட்டம்,சாரணர் இயக்கம்...என பல விடயங்களுடன் தற்போது நீச்சல் தடாக வசதிகளுடன் வடபகுதியில் உருவாகியுள்ள முதலாவது கடற் சாரணர் படையணி என்ற பெருமையினையும் மத்திய கல்லூரியின் கடற் சாரணர் படையணி
பழைய மாணவர்களின் பேராதரவுடன் கடற் சாரணர் படையணி உருவாக்கப்பட்டுள்ளது.புலம்பெயர் நாடுகளில் வாழும் மத்தியின் முன்னாள் சிரேஷ்ட சாரணர்களின் உதவியுடனும் பாடசாலையின் பழைய மாணவனும்
( 1987-2000)முன்னாள் துருப்புத் தலைவரும் தற்போதய ஆசிரியருமான திரு.சுபேதர் பெர்னாண்டோ அவர்களின் விடாமுயற்சியாலும் மத்தியின் மாணவர்கள் பயன்பெறக்கூடிய வகையில் பல்வேறு வகையான சாரணர் உபகரணங்கள்,100கடற் சாரணர் சீருடைகள், சாரணர் கூடாரம்,முதலுதவி சாதனங்கள்,நவீன வசதிகளுடனான அலுவலகம்,போன்றன பழைய மாணவர்களின் பேராதரவுடன் கடற் சாரணர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
2016ம் ஆண்டு சாரணர் நூற்றாண்டு விழாவை(1916-2016) பிரமாண்டமாக கொண்டாடவுள்ள மத்தியின் மைந்தர்களுக்கு பலம் சேர்ப்பதாக கடற் சாரணர் படையணியின் உருவாக்கம் கருதப்படுகிறது.
யாழ் மத்திய கல்லூரியின் அதிபர் திரு.எழில்வேந்தன் அவர்கள் கடற் சாரணர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பழைய மாணவனும் சாரண உதவி மாவட்ட ஆணையாளருமான தில்லைவாசன் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
கடற் சாரண பொறுப்பாசிரியர் திரு.சுபேதர் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் நிகழ்வுகள் யாவும் நடைபெற்றன.
புதிதாக கடற் சாரணர் படையணியில் இணைந்துகொண்ட மாணவர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டது.
பிரதி அதிபர்கள்,பகுதித்தலைவர்கள்,ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள் என பலர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment