இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் இம்மாதம் 23 ஆம் திகதி மஹரகமை தேசிய இளைஞர்கள் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெறுமென இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற இளைஞர் பாராளுமன்ற தேரிதலில் 547 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களுல் 138 பேர் போட்டி இன்றியே தெரிவு செய்யப்பட்டனர்.
இதேவேளை இந்த இளைஞர் பாராளுமன்றத்திற்கு இம்முறை பெண் அபேட்சகர்கள் 44 பேர் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment