ஐந்தாம் வகுப்பினருக்கான சுற்றுச்சூழல் பாடத்திட்டத்தில் இடம்பிடித்த நடிகை.


டெல்லியின் ஸ்பிரிங் டேல்ஸ் என்ற பள்ளியில் ஐந்தாம் வகுப்பினருக்கான சுற்றுச்சூழல் பாடத்திட்டத்தில், நடிகையும், பாடகியும், முன்னாள் உலக அழகியுமானபிரியங்கா சோப்ராவின் வாழ்க்கையையொத்த பாடம் இடம்பெற்றுள்ளது.

அதில், பிரியங்காவின் குடும்ப படங்கள், மற்றும் 2000-ஆம் ஆண்டில் அவர் உலக அழகி பட்டம் பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

சமீபத்தில் இந்தப் பள்ளிக்கு சென்ற பிரியங்கா சோப்ரா, தன்னுடைய வாழ்க்கையையொத்த பாடம் இடம்பெற்றிருப்பதை கண்டு வியந்து போனார்.

ராணுவத்தில் பணிபுரிவோரின் குழந்தைகள் சிறுவயதில் பல இடங்களில் வசிக்கும் சூழ்நிலை ஏற்படுவதை குறித்த பாடமும், பிரியங்காவின் வாழ்க்கையை ஒத்து காணப்படுகிறது.

பிரியங்காவின் தந்தை ராணுவத்தில் பணிபுரிந்ததால் அடிக்கடி வேறு ஊர்களுக்கு மாற்றலாக நேரிடும். எனவே, பிரியங்கா தனது சிறுவயதில், இந்தியாவில் பரேலி, லக்னோ, மும்பை ஆகிய இடங்களிலும், அமெரிக்காவில் நியூட்டன், மசாசுசெட்ஸ், அயோவா போன்ற இடங்களிலும் தனது வாழ்நாளைக் கழித்துள்ளார். இத்தகைய வாழ்க்கை முறையை குறிக்கும் பாடத்தில்தான் பிரியங்காவின் குடும்ப புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :