ஹிஸ்புல்லாஹ் அரசியல் வரலாறு தெரியாதவர் -முபாறக் அப்துல் மஜீட்


பொதுபல சேனா மூலம் முஸ்லிம்கள் எதிர் நோக்கிய பிரச்சினைகளின் போது முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியுடன் ஆக்ரோசமாக பேசினார்கள் என்ற பிரதி அமைச்சர் ஹிஸ்புள்ளாவின் கருத்து மக்களை ஏமாற்றுவதாகும் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முஸ்லிம் சமூகம் மீதான சிங்கள பேரினவாதத்தின் அச்சுறுத்தல்களின் போது வெறும் பார்வையாளர்களாக இருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போது கிழக்கு மாகாணத்துக்கு வந்ததும் மேடை போட்டு மக்கள் மத்தியில் பயில்வான் லேகியம் சாப்பிட்டவர்கள் போன்று வீரம் பேசுவது ஒன்றும் புதியதல்ல.

முஸ்லிம் சமூகம் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு அறிக்கை விடுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை என ஹிஸ்புள்ளா தெரிவித்திருப்பதன் மூலம் அவருக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை என்றே தெரிகிறது. 

அமெரிக்காவின் 'வோட்டர் கேட்' ஊழல் விவகாரம் என்பது எதிர் தரப்பின் பத்திரிகை அறிக்கை மூலமே வெளிக்கொணரப்பட்டு அந்நாட்டின் ஜனாதிபதி ராஜினாமா செய்வதில் போய் முடிந்தது என்பது வரலாறு. அதே போல் 1978ம் ஆண்டு அமைச்சர் ஒருவரால் முஸ்லிம் மாணவிகளுக்கான நடனம் அறிவிக்கப்பட்ட போது அமைச்சரின் நடனமும் ஆலிம்களின் தாளமும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம். ஏச். ஏம். அஷ்ரப் கடுமையான அறிக்கை விட்டார். 

இந்த அறிக்கையின் எதிரொலியாகவே அத்தகைய நடனம் இல்லாமலாக்கப்பட்டது. அதேபோல் 1976 முதல் 87 வரை வெளி வந்த பத்திரிகைகளில் தனிமனிதனான அஷ்ரபின் அறிக்கை வெளி வராத நாட்களே இல்லை என்று கூறலாம். இதன் காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடியில் உருவானது. அறிக்கைகளினால் எந்த நன்மையுமில்லை என்றால் அசாத் சாலி கைது செய்யப்பட்டிருக்கவும் மாட்டார், முபாறக் மௌலவியை சி ஐ டியினர் விசாரித்தும் இருக்க மாட்டார்கள்.

எமது அறிக்கைகள் காரணமாகத்தான் இன்று முஸ்லிம் அமைச்சர்கள் சமூகத்துக்குள் வந்து அப்படி பேசினோம் இப்படி பேசினோம் என ஆயிரத்தொரு இரவுகள் கதை போன்று பொய்க்கதைகளை சொல்கிறார்கள். இவை பொய்தான் என நாம் கூறுவதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. 

அவற்றில் ஒன்றுதான் உண்மையில் ஜனாதிபதியுடன் ஆக்ரோசமாக இவர்கள் பேசியிருந்தால் அதில் ஒரு வீத ஆக்ரோசத்தையாவது பாராளுமன்றத்தில் ஏன் இவர்கள் காட்டவில்லை? அடுத்தது ஜனாதிபதியுடனேயே ஆக்ரோசமாக பேசினார்கள் என்றால் ஏன் ஊடகங்களை கூட்டி பொதுபல சேனாவையும், அதற்கு ஆதரவளிக்கும் அரசையும் கண்டிக்கவில்லை? அவ்வாறு ஜனாதிபதியுடன் ஆக்ரோசமாக பேசியிருந்தால் முஸ்லிம்களின் தலைகள் மீது பொதுபலசேனா பெற்ற வெற்றிகளில் ஒன்றையாவது தடுக்க முடிந்ததா?

எனவேதான் கூறுகிறோம் இந்த அமைச்சர்கள் பொய்க்கதைகளை சொல்லி சமூகத்தை ஏமாற்றுகிறார்கள் என்று. எம்மை பொறுத்தவரை முஸ்லிம் சமூகம் எந்த வகையிலும் இந்த நாட்டில் ஆயுதம் தூக்க முடியாது. 

அதற்காக ஜனநாயகம் தந்த பேச்சுரிமையையாவது பயன்படுத்தக்கூடாதா? சுமூகத்தின் வாக்குகளை பெற்று உறுப்பினராகி விட்டு அந்த சமூகத்தை நட்டாற்றில் விட்டவர்களை விமர்சிக்காமல் அள்ளி கொஞ்சவா முடியும்? அதற்கு வெட்கங்கெட்ட சுய நலவாத உள்ளுர் அரசியல்வாதிகள் இருக்கிறார்களே தவிர, தன்மானமுள்ள முஸ்லிம்கள் இவ்வாறு செய்ய மாட்டார்கள்.

இன்று முஸ்லிம்கள் ஹலாலை இழந்து எது ஹராம் என தெரியாமல் பாரிய மன அழுத்தத்துடன் பொருட்களை வாங்குகிறார்கள். அருவருப்போடு உண்கிறார்கள். இத்தகைய நிலையை இந்த அரசாங்கம் தோற்றுவித்த போது அதற்கு மௌனமாக அனுமதித்த இந்த அமைச்சர்கள் விடயத்தில் முஸ்லிம் சமூகம் இன்னமும் பொறுமையாகவே உள்ளது. இந்த நிலையிலும் இவர்களை மாலையிட்டு வரவேற்கும் மானம், ரோசம் இல்லாதவர்கள்; உள்ளார்கள் என்றால் அது இலங்கை முஸ்லிம் சமூகத்தில்தான்.

நாம் முஸ்லிம் அமைச்சர்கள் எவரையும் பொதுபல சேனா உலமாக்களை நரிகள், கள்வர்கள் என கூறியது போன்று ஏசவில்லை. மாறாக அப்பாவி முஸ்லிம் சமூகத்தை சுயநல பதவிகளுக்காக ஏமாற்ற வேண்டாம் என்றுதான் அரசியல்வாதிகளுக்கு கூறுகிறோம். ஆகவே ஹிஸ்புள்ளா போன்ற அமைச்சர்கள் பொதுமக்கள் மத்தியில் பொய் கதைகளை அவிழ்த்து விடுவதை தவிர்த்து இனியாவது முஸ்லிம்கள் பிரச்சினைகளை பாராளுமன்றத்திலும் சிங்கள, ஆங்கில ஊடகங்களிலும் பேச முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :