சமய சகவாழ்வை ஏற்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி

சமய சகவாழ்வை ஏற்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார். கண்டியில் தலதா மாளிகையின் மஹமலுவை திடலில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.


அவர் மேலும் தெரிவித்ததாவது; 

பௌத்தர்கள் என்ற ரீதியில் நாம் ஒருபோதும் அடிப்படைவாதிகளாக மாறியதில்லை. இந்து, கிறிஸ்தவம் மற்றும் முஸ்லிம் என எந்த மதமாக இருந்தாலும் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கு இடமுண்டு.

பௌத்த தர்மம் வீழ்ச்சியுறும் போது சகவாழ்வும் தானாகவே சீர்குலையும். சில அரசசார்பற்ற நிறுவனங்கள் நாட்டில் சகவாழ்வை இல்லாதொழிக்க முயற்சிப்பதுடன் நாட்டில் எந்தவொரு மதத்திற்கும் விசேட இடத்தை வழங்கக்கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்தி வருகின்றன.

ஏனைய நாடுகளில் மத ரீதியிலான மோதல்களை நாம் காண்கிறோம். இவ்வாறானதொரு சூழ்நிலை எமது நாட்டில் ஏற்படவில்லை. இது எமது அதிர்ஷ்டமாகும்,’ என்றார் ஜனாதிபதி. மகா சங்கத்தினர், பிரதமர் D.M.ஜயரத்ன மற்றும் இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :