
கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நூலக திறப்பு நிகழ்வுக்கு கிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தபோதிலும் அதனையும் மீறி சற்று முன்னர் நீதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அந்நூலகத்தை திறந்து வைத்துள்ளார்.
குறித்த நூலகத்திற்கு கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் தந்தையின் பெயர் சூட்டப்பட்டு 'மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த மீனவர் வாசிகசாலை' எனும் பெயரில் அந் நூலகம் திறக்கப்படுவதை உடனடியாக தடை செய்யுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தனது செயலாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இருப்பினும் ஏலவே திட்டமிட்டபடி இன்று மாலை குறித்த நேரத்தில் இந் நூலகம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment