பாலமுனை இளைஞர் அமைப்பினர் நடத்திய லீடர் சம்பியன் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

பாலமுனை இளைஞர் அமைப்பினர் நடத்திய லீடர் சம்பியன் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் சம்பியனாக அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு அல்-ரஹிமிய்யா அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பாலமுனை இளைஞர் அமைப்பின் முதலாவது ஆண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட மின்னொளியிலான அணிக்கு 7 பேர் கொண்ட 5 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட லீடர் சம்பியன் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த ஐந்து தினங்களாக நடைபெற்று வந்தது.

அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 48 கிரிக்கெட் அணிகள் இச்சுற்றுப் போட்டியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இளைஞர் அமைப்பின் தலைவர் எஸ்.ஆப்தீன் தலைமையில் நடைபெற்ற இறுதிப் போட்டி நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தாஹிர், அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா,உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.எம்.உவைஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாரை மாவட்ட பொருளாளரும், தேசிய பணிப்பாளருமாகிய ஏ.சீ.யஹியாகான் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை பைனா கிரிக்கெட் அணியினரும், அக்கரைப்பற்று ள்ளிக்குடியிருப்பு அல்-ரஹிமிய்யா கிரிக்கெட் அணியினரும் கலந்து கொண்டனர். இதில் அல்-ரஹிமிய்யா அணியினர் 25 ஓட்டங்களினால் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற அல்-ரஹிமிய்யா அணிக்குரிய கிண்ணத்தை பிரதம அதிதியான நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அதன் தலைவரிடம் வழங்கி வைத்தார். இரண்டாமிடம் பெற்ற பைனா அணிக்குரிய கிண்ணத்தை பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அதன் தலைவரிடம் வழங்கி வைத்தார்.

சிறப்பாட்டக்காரர், தொடரின் சிறந்த வீரர், சிறந்த பந்துவீச்சாளர், நடுவர்கள் ஆகியோருக்கான பரிசுகளை மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தாஹிர் முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உப தலைவரும், தொழிலதிபருமான ஏ.எல்.மர்ஜூன உட்பட பலரும் வழங்கி வைத்தனர்.

இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு வைபவம் நல்லிரவு 2.00 மணி வரை இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். கூடுதலான ரசிகர்கள், பொதுமக்கள் மைதானத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவுப் ஹக்கீம் சமகால அரசியல் தொடர்பாக நீண்ட உரையொன்றை இங்கு நிகழ்த்தினார். அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் நீதி அமைச்சரின் பாலமுனை விஜயத்துக்கான சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மிக நீண்ட காலத்திற்குப் பிறகு நல்லிரவு தாண்டி கிரிக்கெட் போட்டியும், சமகால அரசியல் தொடர்பான பேச்சும் இடம்பெற்றமை விசேட அம்சமாகும். பாலமுனை இளைஞர் அமைப்பின் முயற்சிகளை அதிதிகள் பாராட்டிப் பேசியதும் குறிப்பிடத்தக்கதாகும். -





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :