(சலீம் றமீஸ்)
இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும்,இளைஞர் பாராளுமன்றத்தின் சபை முதல்வருமான யூ.எல்.முஹம்;மட் சபீர் அவர்கள் சாரணர் குழுவின் மாவட்ட இளைஞர் குழுத் தலைவராக சத்திய பிரமாணம் செய்துள்ளார்.
மாவட்ட ஆணையாளர் ஐ.எல்.எம்.மஜிட் அவர்களினால்,அட்டாளைச்சேனை ஆலம்குளம் றகுமானியா வித்தியாலத்தில் அக்கரைப்பற்று-கல்முனை சாரணர் கிளையினால் நடாத்தப்பட்ட முகாம் பயிற்சி பட்டறையின் இறுதி நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.சி.எம்.முஸ்;ஸமில் தலைமையில் இடம்பெற்றது.இந்த நிகழ்வின் போதே சாரணர் பட்டி அனுவிக்கப்பட்டு சத்தியபிரமாணம் செய்யப்பட்டது.
அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர்கள் மத்தியில் நற்பெயரும்,மதிப்பும் பெற்று அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் உப செயலாளராகவும்;,அஸோவா சமூக அமைப்பின் இளைஞர் விவகார பணிப்பாளரகவும்,இன்னும் பல அமைப்புகளில் சமூக பணியாற்றி வரும் இவர் இம்மாதம் 4 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலின் போது பிரதேச வேறுபாடு,கட்சி வேறுபாடின்றி அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வாழுகின்ற மூவின இளைஞர்களினால் தெரிவு செய்யப்பட்டார்.
இவர் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி,நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் 3 ஆவது புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சத்திய பிரமாண நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை,சாரணர் முகாம் பிரதம கண்காணிப்பாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா,மாவட்ட உதவி ஆணையாளர்களான பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ்,எம்.எப்.றிபாஸ்,கிராம நிருவாக உத்தியோத்தர் எஸ்.எல்.ஏ.சமட்,கராத்தே பயிற்சி ஆசிரியர் பாயிஸ்,பிரதி அதிபர் ஐபிர் உட்பட முக்கிஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment