கல்முனை பட்டினசபையாக இருந்ததை விட மாநகரசபையின் நடவடிக்கை மோசமாக உள்ளது.

முஸ்லிம் காங்கிரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரேயொரு மாநகர சபையான கல்முனை குப்பை. கூழங்களால் நாற்றமடிக்கிறது என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

    ஒரு காலத்தில் கல்முனை, பட்டின சபையாக இருந்த போது இருந்ததை விட மிக மோசமாக தற்போதைய மாநகர சபை உள்ளது. தற்போதைய மாநகர

உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட பின் வாரத்துக்கு ஒரு முறை குப்பைகள் மாநகர சபையால் சேகரிக்கப்பட்டு வந்தன. பின்னர் இது இரண்டு வாரத்துக்கு ஒரு முறை என்று கடைசியில் மாதத்துக்கு ஒரு முறை என மாறியுள்ளது.
 
கல்முனை மாநகர மக்களின் வரிகள் மூலம் 16 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக கல்முனை மேயர் சிராஸ் ஊடகங்களில் பெருமைப்பட்டுக்கொள்கிறார். ஆனால் மக்களின் குப்பைகள் மாதத்துக்கு ஒரு முறை சில வேளை ஒரு மாதம் கடந்த பின்னர் சேகரிக்கப்படுகின்றன. இதன் மூலம் கல்முனை மாநகர சபையின் வருமானம் மக்களின் நலன்களுக்கு செலவழிக்கப்படாமல் எதற்காக செலவழிக்கப்படுகின்றன என்பது மர்மமாக உள்ளது.
 
கல்முனையில் மாதக்கணக்கில் குப்பைகள் அள்ளப்படவில்லை என்பதற்கு கல்முனைக்குடியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹரீசின் காரியாலயம் உள்ள ஜும்ஆ பள்ளி வாயல் வீதி சிறந்த சான்றாக உள்ளது. அவ்வீதியில் ஒரு மாதமாக குப்பைகள் அள்ளப்படாததால் வீடுகளில் தேங்கி நிற்கும் குப்பைகளின் நாற்றம் காரணமாக சிறுவர்கள் தினமும் நோய்வாய்ப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். ஒரு எம் பியின் வீதிக்கே இந்நிலை என்றால் ஏனைய வீதிகள் நிலை பற்றி சொல்லத்தேவையில்லை.

    மேற்படி வீதிக்கு மேயரும், எம் பியும் அவர்களின் தலைவர் ரஊப் ஹக்கீமும் மீடியாக்களுடன் நேரடியாக வந்தால் மக்கள் தமது வீடுகளில் உள்ள குப்பைகளை அவர்களுக்கு காட்டுவார்கள். இதாற்கான ஏற்பாட்டை மேயரினால் செய்ய முடியுமா என முஸ்லிம் மக்கள் கேட்சி கேட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :