ஆர்ப்பாட்டத்தில் ஒரு காரியாலயமேனும் மூடினால் நான் பதவி துறப்பேன் -பிரதி அமைச்சர்.


மின்சார கட்டண அதிகரிப்பிற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்த போராட்டத்தின் போது ஏதாவது ஒரு காரியாலயம் மூடப்பட்டால் நான் பதவி துறப்பேன் என்று பிரதியமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க காரியாலயங்கள் அல்லது எந்தவொரு தனியார் காரியாலயமும் நாளை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டால் நான் பதவிதுறப்பேன். என்று பெருந் தோட்ட கைத்தொழில் பிரதியமைச்சர்
ஏர்ல் குணசேகர தெரிவித்துள்ளார்.

கம்பளை ரத்னாசார விஹாரையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு சவால் விடுத்தார்.

சிறிய விடயங்களுக்கே எதிர்க்கட்சிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும். இதுவும் அப்படியானதொரு தருணமாகும். ஒரு காரியாலயத்தையேனும் நாளை செவ்வாய்க்கிழமை மூடி காண்பிக்குமாறு நான் எதிரணிக்கு சவால் விடுக்கின்றேன்.

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோய் லால்காந்த தனது முகத்தில் ஒருமுறை கரியை பூசிக்கொண்டார். இம்முறை ரணிலும் லால் காந்தவும் இணைந்து தங்களுடைய முகங்களில் கரியை பூசிக்கொள்ள போகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :