மீள் குடியேறும் வடமாகாண முஸ்லிம்களுக்கான காணிகளை வழங்க அரச அதிபரும் இராணுவமுமே தடை செய்வதாக சொல்லப்படும் நிலையில் மாகாண சபைகளுக்கான காணி அதிகாரம் வழங்கப்பட்டால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அ. இ. முஸ்லிம் காங்கிரஸ் கூறுவது அக்கட்சியினரின் அறியாமையை காட்டுவதாகும் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
13வது சட்டத்தில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரம் என்பன முஸ்லிம் சமூகத்துக்கு பாதகங்களையே ஏற்படுத்தும் என்பது போல் அ. இ. மு. கா செயலாளர் நாயகம் பத்திரிகை அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் விரட்டப்பட்டு மீள் குடியேற முற்படும் வட மாகாண முஸ்லிம்கள் தமது காணிகளில் அல்லது அரச காணிகளில் மீள் குடியேற முடியாமல் தடுக்கப்படுவதை உதாரணமாக காட்டி காணி அதிகாரம் மாகாண சபைகளுக்கு வழங்குவது உகந்ததல்ல என்பது போல் கூறியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் மீள் குடியேறுவதை முல்லைத்தீவு இராணுவ அதிகாரியும், அரச அதிபரும் தடை போடுவதாக நவமணி பத்திரிகையின் தலைப்புச்செய்தி கூறுகிறது. அத்தோடு முல்லைத்தீவு முஸ்லிம்கள் அரசாங்கத்தால் கைவிடப்பட்டுள்ளதாகவும் பல இணையத்தளங்களும் செய்திகள் வெளியிட்டுள்ளன. இவை மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் கட்டாயம் வழங்க வேண்டும் என்ற செய்தியையே நமக்குச்சொல்கின்றன.
தற்போது காணி அதிகாரம் இலங்கை அரசின் கையிலேயே உள்ளது. அரசாங்கம் நினைத்தால் முஸ்லிம்களுக்கு காணிகளை இலகுவாக வழங்கி குடியேற்றியுமிருக்கலாம்.
ஆனால் அரசு தொட்டிலை ஆட்டிக்கொண்டே பிள்ளையையும் கிள்ளுகிறது. முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தடைபோடுகிறார்கள் என்பது வெறும் போலிச்சாட்டாhகும். த. தே. கூ தடுத்தும் கூட வடக்கில் பல இடங்களில் இராணுவத்துக்காக காணிகள் சுவீகரிக்கப்படும் போது முஸ்லிம்களுக்கான காணிகள் வழங்குவதில் அவர்களின் தடையை புறந்தள்ளுவது என்பது அரசுக்கு கஷ்டமான ஒன்றல்ல.
அதே போல் மீள் குடியேறும் முஸ்லிம்கள் த. தே. கூட்டமைப்பினருக்கு பயப்படுகிறார்கள் என்பது முஸ்லிம்களை உலக மகா கோழைகளாக காட்டுவதாகும். காரணம் தமிழ் கூட்டமைப்பினர் ஆயுதம் தூக்கியவர்களாக இல்லை, அவர்களுக்கு பின்னாலும் ஆயுத அமைப்பு இல்லை.
அவ்வாறு அவர்கள் தடைபோட்டால் அவர்களுக்கெதிராக ஜனநாயக வழி முறையில் நின்று போராடுவது வடக்கு முஸ்லிம்களுக்கு கஷ்டமானதல்ல. உண்மையில் அரச அதிபரினதும் இராணுவத்தினதும் தடைக்கெதிராகவே முஸ்லிம்கள் அச்சப்படுகிறார்கள், கவலைப்படுகிறார்கள். இந்தத்தடையின் பின்னால் அரசு இருப்பதையே இவை காட்டுகின்றன.
இராணுவ அதிகாரியை கட்டுப்படுத்தும் அதிகாரம் மாகாண சபைகளுக்கில்லை. அரசாங்கமே அவரை கட்டுப்படுத்தும். அப்படியிருந்தும் அரசு அவரை கட்டுப்படுத்தவில்லை என்பதன் மூலம், மத்திய அரசில் காணி அதிகாரம் இருக்கக்கூடாது என்பதையும் மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் இருந்திருந்தால் அதில் இராணுவம் தலையிடாத நிலை ஏற்பட்டிருப்பதோடு முஸ்லிம்களும் இலகுவாக தமது காணிகளில் குடியேறியிருப்பர் என்பதையும் புரியலாம். இதற்கு மாகாண சபை தடை போட்டால் அந்த சபைக்கெதிராக ஜனநாயக ரீதியில் போராடுவது எப்படி என்பது வடக்கு முஸ்லிம்களுக்கு நன்கு தெரியும்.
ஆனால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அ. இ. முஸ்லிம் காங்கிரஸ், வட மாகாணத்தில் முஸ்லிம்கள் தமது காணிகளில் குடியேற தடை விதிக்கப்படுகிறது என கூறுவது அக்கட்சியின் கையாலாகா தனத்தையும், தமது பதவிகளை காப்பதற்காக அரசுக்கு முழுமையாக சோரம் போயுள்ளதனையுமே காட்டுகிறது.
மிகச்சாதாரண இப்பிரச்சினையை ஜனாதிபதியின் ஒரு பணிப்புரை மூலம் இராணுவத்தையும், அரச அதிபரையும் கட்டுப்படுத்துவதன் மூலம் தீர்க்க முடியும். இதனைக்கூட செய்ய வக்கில்லாத ஒரு கட்சி தன்னை அகில இலங்கைக்குமுரிய கட்சி என சொல்லிக்கொள்வது வெட்கக்கேடானதாகும்.
ஆகவே இன்றுள்ள சமாதான சூழ் நிலையில் வடக்கு கிழக்கின் ஆட்சியதிகாரம் மத்திய அரசுக்குள்ள நிலையில் காணி, பொலிஸ் அதிகாரம் 13வது திருத்த சட்டப்படி மாகாண சபைகளுக்கு மீண்டும் வழங்கப்படுவதே வடக்கு கிழக்கு மக்களுக்கு விமோசனமளிக்கும் என்பதை முஸ்லிம் கட்சிகள் தங்களது பதவிகளை பார்க்காது சமூகம் பற்றிய சிந்தனையுடன் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.

0 comments :
Post a Comment