மேலாடை அணியாமல் சுற்றித் திரியும் பெண்களுக்கு அனுமதி வழங்கிய அமெரிக்கா-படங்கள்


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இனி மேலாடை அணியாமல் சுற்றித் திரியும் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுவரை, மேலாடை அணியாமல் சுதந்திரமாகஆபாசமாக சுற்றித் திரிந்த பெண்களை போலீசார் கைது செய்து அபராதம் விதிக்கும் நடைமுறை இருந்து வந்தது. 

இருந்தபோதும், இந்த கட்டுப்பாடு, அபராதம் இதயெல்லாம் மீறி வருடந்தோறும் ஆகஸ்ட் 21ம் தேதியன்று அமெரிக்காவின் பல நகரங்களில் மேலாடை அணியாத பல பெண்கள் பேரணி நடத்தி புரட்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது திடீரென, நியூயார்க் நகரில் மேலாடை அணியாமல் நடமாடலாம். அப்படி நடமாடும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இதன் பிண்ணனியில் நடந்தது என்னவென்றால்…

உலகம் முழுவதும் மேலாடை அணியாமல் சுற்றுப்பயணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தும் ஹோல்லி வேன் வோஸ்ட், நியூயார்க் நகரில் ‘சுதந்திரமாக’ சுற்றி வந்தபோது அவரை கைது செய்தனர் போலீசார். பின் கோர்ட்டில் வழக்கும் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ஹோல்லி வேன் வோஸ்ட் சார்பில் வாதாடிய வக்கீல், ’1992 ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கில் பெண்கள் மேலாடை அணியாமல் செல்வதை குற்றமாக கருத முடியாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எனது கட்சிக்காரர் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று மேற்கோள் காட்டி வாதாடினார்.

நியாயத்தைப் புரிந்து கொண்ட நியூயார்க் கோர்ட், ‘முந்தைய தீர்ப்பின் அடிப்படையில் மேலாடை இல்லாமல் பெண்கள் பொது இடங்களில் நடமாடுவதை குற்றம் என்று கூற முடியாது. எனவே, குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்து உத்தரவிடுகிறேன்’ என்று சமீபத்தில் தீர்ப்பளித்தது.

நியூயார்க் நகரில் பணியாற்றும் 34 ஆயிரம் போலீசாருக்கு நகர போலீஸ் தலைமையகம் நேற்று ஓர் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில்,’பெண்கள் மேலாடை இன்றி திரிவது குற்றம் அல்ல. எனவே, இந்த குற்றப்பிரிவின் கீழ் யாரையும் கைது செய்ய வேண்டாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
இப்படியான செயல்களில்தான் முன்னணிபெறுகிறது மேற்குலகம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :