இலங்கையில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதிவாதிகளுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரை எதிர்வரும் 18ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியரசர்களான சந்தியா ஹெட்டிகே மற்றும் பி.ஏ.ரத்னாயக்க ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மின்சார கட்டண அதிகரிப்பை ரத்துச் செய்யுமாறு மனித உரிமைகள் தொடர்பான சட்டத்தரணிகள் சங்கம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
இந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை ஜூன் 19ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment