சாரணர் குழுவில் இணைந்து செயல்பட்டவர்கள் தான் எமது நாட்டின் சிறந்த தலைவர்களாகவும், அரசியல் வாதிகளாகவும், அரச, அரச சார்பற்ற திணைக்களங்களின் தலைவர்களாகவும் இன்று சிறந்து விழங்குகின்றனர்.
இதேபோன்று இங்கு மூன்று நாள் சாரணர் பயிற்சி பட்டறையில் ஈடுபட்டுள்ள நீங்களும் எதிர்காலத்தில் சிறந்த கல்விமான்களாகவும், அரசியல் தலைவர்களாகவும் மற்றும் ஏனைய உயர் பதவி வகிக்கக் கூடிய சந்ததியினர்களாக திகழவேண்டும் என்பதே எனது நோக்கம் என அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் கூறினார்.
பொத்துவில் தொடக்கம் மருதமுனை வரையிலான தமிழ், முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்ட மூன்று நாள் சாரணர் பயிற்சிப் பாசறை முகாம் அட்டாளைச்சேனை - ஆலம்குளம் றகுமானியா வித்தியாலயத்தில் அதன் அதிபர் ஏ.சி.எம்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது. இதில் இரண்டாவது நாள் நிகழ்வுக்கு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த மூன்று நாள் சாரணர் பயிற்சியில் கலந்து கொண்டுள்ள மாணவர்கள் இன மத வேறுபாடின்றி மிக ஒற்றுமையாக இணைந்து ஒரு தட்டில் உணவையும், ஒரு கோப்பையில் தேனீரையும் உண்னுகின்றீர்கள். இதன் மூலம் ஒரு ஓற்றுமைத் தன்மை இங்கு விளங்குவதோடு வௌ;வேறு பிரதேச பாடசாலை தமிழ், முஸ்லிம் மாணவர்களிடத்தில் ஒரு புதுவித நட்புறவையும் ஏற்படுகின்றன.
சாரணர் ஒன்று கூடல்கள் மூலம் ஒவ்வொரு மாணவர்களிடத்தில் இன உறவை கட்டியெழுப்புவதற்கும் மூவின சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து அதில் ஒற்றுமைத் தன்மை ஏற்படுத்த முனையவேண்டும். குறிப்பாக இளைஞர்களாகிய நீங்கள்தான் மக்கள் மத்தியில் இன உறவையும், ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கு உழைக்க வேண்டும்.
பின்தங்கிய கிராமங்களில் இவ்வாரான சாரணர் முகாம்களை அமைத்து பயிற்சிகள், தலைமைத்துவ வழிகாட்டல்கள், ஒருவர்க்கெருவர் விட்டுக் கொடுக்கம் நல்ல சினேகிதத் தன்மைகள் போன்ற பயிற்சிகளை வழங்குகின்ற ஒரு இடமாகவும், எதிர்கால நற்பிரஜைகளை உருவாக்கும் பயிற்சிதான் இந்த சாரணிய பயிற்சிப் பட்டறையாகும்.
இந்தப் பயிற்சிப் பட்டறையில் ஈடுபடுகின்ற மாணவர்கள் மத்தியில் நல்ல நற்பண்புகளும், உறவுகளும் வளர்ந்து வருவதுடன் அந்தந்தப் பிரதேசத்தில் மக்கள் மத்தியில் இன ஒற்றுமை பெருக ஒரு வழிகாட்டியாகவும் காணப்படுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

அத்துடன் தமிழ், முஸ்லிம், சிங்களவர் என்ற பாகுபாடின்றி ஒரு ஒற்றுமையான அபிவிருத்தி பாதையை நோக்கி செல்ல இப்பயிற்சிப் பாசறை ஒரு சந்தர்ப்பமாக அமையும் என்பதில் எந்த சந்தேகங்களுக்கும் இடமே இல்லை என்பது உறுதி.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், எம்.தவம், அட்டாளைச்சேனை அணைத்து விளையாட்டுக் கழக சம்மேளனத் தலைவர் ஹம்ஸா சனூஸ் ஜே.பி.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், எம்.தவம், அட்டாளைச்சேனை அணைத்து விளையாட்டுக் கழக சம்மேளனத் தலைவர் ஹம்ஸா சனூஸ் ஜே.பி.
மாவட்ட சாரணர் முகாம் பிரதம கண்கானிப்பாளரும், ஆணையாளருமான எம்.ஐ.எம்.முஸ்தபா, மாவட்ட ஆணையாளர் ஐ.எல்.எம்.மஜீட், மாவட்ட உதவி ஆணையாளர் பிரதேச சபை உறுப்பினரும் தேசிய சாரணச் சங்க செய்தியாளருமான எஸ்.எல்.முனாஸ், உதவிமாவட்ட ஆணையாளரும் ஊடகவியலாளருமான எம்.எஃப்.றிபாஸ், சாரண ஆசிரியர்.எம்.சகுர்டீன் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி பட்டறையின் போது திறமைகளை வெளிக்காட்டிய சாரணர்கள் கௌரவிக்கப்பட்டு பரிசில்களும், சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த பயிற்சி பட்டறையின் போது திறமைகளை வெளிக்காட்டிய சாரணர்கள் கௌரவிக்கப்பட்டு பரிசில்களும், சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment